உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கத்தி குத்து ஒருவர் கைது

கத்தி குத்து ஒருவர் கைது

போடி: போடி அருகே வினோபாஜி காலனியை சேர்ந்தவர் வேல்ராஜ் 44. இவர் தள்ளு வண்டியில் பழங்கள் விற்பனை செய்து வந்தார். போடி ஜே.கே., பட்டியை சேர்ந்த பாண்டி 45, வேல்ராஜிடம் பழங்களை வாங்கி விட்டு பணம் தராமல் சென்றுள்ளார். வேல்ராஜ் பணம் கேட்டதில் ஆத்திரம் அடைந்த பாண்டி, வேல்ராஜ்யை தகாத வார்த்தையால் பேசி அடித்ததோடு, கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். வேல்ராஜ் புகாரில் போடி தாலுாகா போலீசார் பாண்டியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை