உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொத்தடிமை தொழிலாளர்  ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர்  ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தேனி: தேனி நகராட்சி காமராஜர் நினைவு பஸ் ஸ்டாண்டில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழியை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன், கலெக்டர்ஷஜீவனா வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தன. விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை இருவரும் கையொப்பம் இட்டு துவக்கி வைத்தனர். நிகழ்வில் மாவட்ட நீதிபதிகள் அனுராதா, கணேசன், கண்ணன், கீதா, பரமேஸ்வரி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணக்குமார், தேனி நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) முத்துமாதவன், பிரகாஷ் (வளர்ச்சித்துறை), மாவட்ட சமூகநலஅலுவலர் சியாமளாதேவி, மாவட்டவழங்கல் அலுவலர் மாரிசெல்வி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மனுஷ்ஷியாம்சங்கர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி