கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
தேவதானப்பட்டி; பஸ்வசதி குறைவால் பள்ளி நேரங்களில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.பெரியகுளம் தாலுகா கிராமப்பகுதிகளான தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, வடுகபட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஜெயமங்கலம் ஆகிய ஊர்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்உள்ளன. சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் வசதிக்காக பெரியகுளத்தில் இருந்து தேவதானப்பட்டிக்கு வடுகபட்டி வழியாக காலை 8:00 மணிக்கு ஒரே ஒரு அரசு பஸ் செல்கிறது. இதே நேரத்தில் தேவதானப்பட்டி யிலிருந்து ஒரு அரசு பஸ் வருகிறது. இதில் அதிகளவில் பள்ளி மாணவ, மாணவிகள் பயணிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ் வசதி இல்லை. இதனால் காலையில் வரும் ஒரே பஸ்சில் அனைவரும் ஏறுகின்றனர். சில மாணவர்கள் பஸ்சில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர். காலை 8:00 மணியை தொடர்ந்து 8:10, 8:20 என அடுத்தடுத்து இரண்டு பஸ்கள் இயக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி வருகின்றனர். கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.--