பள்ளியில் பி.டி.ஏ., நிர்வாகிகள் நியமனம் குறித்து வாக்குவாதம் பேச்சு வார்த்தையில் உடன்பாடு
தேனி: தேனி ஒன்றியம் தர்மாபுரி அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கள் கழக நிர்வாகிகளாக அதே ஊரை சேர்ந்தவர்களை நியமிக்க வலியுறுத்தி, தலைமை ஆசிரியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளியில் மாணவிகள் 200 பேர், மாணவர்கள் 106 பேர் என 306 பேர் படிக்கின்றனர். மொத்தம் உள்ள 28 ஆசிரியர்களில் 19 பேர் நிரந்தரப்பணியில் உள்ளனர். ஓராண்டுக்கு முன் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் நியமன காலம் முடிந்தது. தலைமை ஆசிரியர் ஆண்டனி பெற்றோர் ஆசிரியர்கள் கழக நிர்வாகிகளை புதிதாக நியமிக்க ஏற்பாடு செய்தார். இதற்கு பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி செல்வக்குமார் தலைமையிலான 50 பேர் ஊரை சேர்ந்தவர்களை பள்ளி வளர்ச்சிக்காக பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நியமிக்க வேண்டும்' எனகோரி வாக்கு வாததத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளியில்படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகத்தில்நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்றார். இதனால் பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில் பள்ளிக்கு வந்த 50 பேர் வெளியே சென்று மறியலில்ஈடுபட முயற்சித்தனர். போலீசார், நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. மாணவர்களின் பெற்றோர் 20 பேர் பெற்றோர் ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். அதன்பின் கலைந்து சென்றனர்.