வி.ஏ.ஓ., ஆபீசில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
மூணாறு: தேவிகுளத்தில் கே.டி.எச்., வி.ஏ.ஓ.,அலுவலகம், அதிகாரியின் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனையிட்டனர். கேரளா, காசர்கோடு மாவட்டத்தில் சிற்றாரிக்கல் வி.ஏ.ஓ., வாக பணியாற்றியவர் அருண். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதன் கால அளவு முடிந்த பிறகு மூணாறு அருகே தேவிகுளத்தில் உள்ள கே.டி.எச். கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த எட்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வி.ஏ.ஓ., ஆபீஸ், அருண் வசித்து வரும் அரசு குடியிருப்பில் கோழிக்கோட்டைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். காலை 7:00 மணிக்கு துவங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரியவந்தது.