உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆட்டோ டிரைவர் பலி

 ஆட்டோ டிரைவர் பலி

கூடலுார்: கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ரவி 56. ஆட்டோ டிரைவர். இவர் பளியன்குடி அருகே முத்துப்பாண்டியன் தோட்டத்தில் பலாக்காய் எடுத்து வருவதற்காக ஆட்டோவில் சென்றார். மரத்தில் ஏறி காய் பறிக்கும் போது மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இவர் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். லோயர்கேம்ப் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ