உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

கூடலுார்: தேக்கடி சைக்கிளிங் கிளப் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. 'ஆரோக்கியமே உண்மையான போதை' என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் தேக்கடி சைக்கிளிங் கிளப்பின் ஐந்தாம் ஆண்டு விழா தேக்கடியில் நடந்தது. இதனை முன்னிட்டு போதைக்கு எதிராக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சுற்றுலாத்தளத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இளைஞர்கள் போதைப் பொருட்களின் பிடியில் சிக்குவதற்கு முன், அவர்களை உடலளவில் ஆரோக்கியமான செயல்களில் ஈடுபட வைப்பதே சைக்கிளிங் பயணத்தின் முக்கிய நோக்கம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். போதைப் பொருட்களின் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன. தனுஷ்கோடி, கன்னியாகுமரி, குமரகம், மூணாறு ஆகிய சுற்றுலா தளங்களில் இந்த கிளப் சார்பாக சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக எபின், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக ரஹீம்பாபு, துணைத் தலைவராக சதீஷ் தாமோதர், இணைச் செயலாளராக பினீஷ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக ராஜேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை