இளம் வயதில் கருவுறுதலை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் செப்.3 ல் மேகமலையில் துவக்கம்
தேனி: இளம் பருவத்தில் கருவுரும் வளரிளம் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வீதி நாடகம் மூலம் பிரசாரம் நடத்த மாநில முழுவதும் 23 வட்டாரங்களை மாநில சுகாதாரத்துறை தேர்வு செய்துள்ளது. மாநில முழுவதும் இளம் பருவத்தில் கருவுரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த விபரம் மாநில தாய் சேய் நல கணக்கெடுப்பு, மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள், சமூகநலத்துறை கள ஆய்வாளர்கள் மூலம் தெரியவந்தது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வளரிளம் பெண்கள் மலை பகுதிகளில் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டதால், விழிப்புணர்வு வீதி நாடக பிரசாரம் செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்தது. அதற்காக பாதிப்பு உள்ள மாவட்டங்களிலும் 23 வட்டாரங்களை தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் தேனி மாவட்டம், மேகமலை ஹைவேவீஸ் பேரூராட்சியில் செப். 3ல் வீதி நாடக பிரசாரத்தை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைக்க உள்ளார்.