மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்
23-Sep-2026
தேனி: மயிலாடும்பாறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் ‘ஊட்டச்சத்து மாத’ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மாவட்ட அலுவலர் ரேவதி துவங்கி வைத்தார். மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகம் முதல் பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலம் நடந்தது. கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகள் சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதன் அவசியம் பற்றி ஊர்வலம் மூலம் அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊரகவளர்ச்சித்துறையினர், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் செல்விசித்ரா ஒருங்கிணைத்தார்.
23-Sep-2026