இரு வாரங்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி
கம்பம்: சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 2 வாரங்களுக்கு பின் விலக்கி கொள்ளப்பட்டு, நேற்று முதல் குளிக்க வனத் துறை அனுமதி வழங்கியது. கடந்த அக். 17 ல் பெய்த கனமழை காரணமாக மேகமலையில் உள்ள அணைகள் நிரம்பியது. எனவே உபரி நீர் சுருளி அருவிக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் அருவியில் வெள்ளம் கரை புரண் டோடியது. வெள்ளப் பெருக்கு காரணமாக அருவி பகுதியில் சேதம் ஏற்பட்டது. அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. தற்போது மழை இன்றி வெள்ளம் வடிந்ததால் கடந்த சில நாட்களாக அருவியில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் பராமரிப்பு பணிகளும் நிறைவு பெற்றது. எனவே நேற்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. இரண்டு வாரத்திற்கு பிறகு அனுமதி வழங்கியுள்ளதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் குளித்து செல்கின்றனர்.