பா.ஜ., ஸ்தாபன தின விழா கருத்தரங்கம்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் பா.ஜ., ஸ்தாபனத்தின விழா, கருத்தரங்கம் சக்கம்பட்டியில் திருமண மண்டபத்தில் நகர் தலைவர் மனோஜ்குமார் தலைமையில் நடந்தது. வழக்கறிஞர் குமார் முன்னிலை வகித்தார். பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கப்பெருமாள் 10 ஆண்டுகால பா.ஜ., அரசின் சாதனைகள், கட்சியின் கட்டமைப்பு குறித்து பேசினார். மண்டல தலைவர்கள் கார்த்திக், நந்தினி, ராஜா, தெய்வம், மாவட்டத் துணைத் தலைவர் ஜெயராம், மண்டல பார்வையாளர் கண்ணன் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.