உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக்கூட்டம்

தேனியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக்கூட்டம்

தேனி: தேனி பா.ஜ., கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, விளையாட்டு பிரிவு மாநிலத்தலைவர் அமர்பிரசாத்ரெட்டி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் தலா 50 பேரை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். பூத் நிர்வாகிகள் நியமித்து பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. நிகழ்வில் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங் பெருமாள், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் சிவராமன் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை