உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஊர்வலம்

கம்பம்: கம்பத்தில் இந்திய இராணுவத்தின் சிந்தூர் ஆப்பரேஷனை ஆதரித்தும், பிரதமர் மோடியை பாராட்டியும், இந்திய இராணுவத்திற்கு துணை நிற்போம் என்ற கோஷத்துடன் பா.ஜ. சார்பில் ஊர்வலம் நடந்தது. வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்து துவங்கி,காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு நடந்த கூட்டத்திற்கு நகர் பா.ஜ. தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், பா.ஜ. ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை