உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்

கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்

தேனி,: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்ற முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும், அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று சி.பி.எஸ்., (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயகத்தினர் கண்களை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வீரபாண்டி நீர்வளத்துறை அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தலைமை வகித்தார். அரசு கலை அறிவியல் கல்லுாரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டாக்டர் சுரேஷ், நிர்வாகிகள் வினோத்குமார், சிவக்குமார், தங்கபாண்டி, ரமேஷ், செல்வம், சுருளிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ