உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வளர்ச்சி திட்டங்களால் வளமாகும் போடி நகராட்சி

வளர்ச்சி திட்டங்களால் வளமாகும் போடி நகராட்சி

போடி நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி தலைவர் ச.ராஜ ராஜேஸ்வரி, கமிஷனர் எஸ்.பார்கவி கூறியதாவது: போடி நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.76.15 கோடி செலவில் குடிநீர் வாரியம் மூலம் குரங்கணியில் இருந்து கூடுதலாக பைப்லைன் அமைத்து பரமசிவன் கோயில் அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சுத்திகரித்து குடிநீர் வழங்கும் பணிகள் நடந்துள்ளது. போடி நகராட்சி பகுதியில் 4 இடங்களில் குடிநீர் மேல் நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தட்டுப்பாடு இன்றி சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கோடையை சமாளிக்க ரூ. 30 கோடியில் எல்லப்பட்டியில் இருந்து போடி வரை குடிநீர் கொண்டு வந்தது உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.3.51 கோடி செலவில் புதிதாக தார் ரோடு,பேவர் பிளாக் ரோடு, பூங்கா, எரிவாயு மயானம் பணி நடந்துள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.06 கோடியில் மழைநீர் வடிகால், ஆழ்துளை கிணறு அமைத்தல், பேவர் பிளாக் ரோடு பணிகள் நடந்துள்ளன. உள்கட்டமைப்பு மேம்பாடு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2.44 கோடி செலவில் அனைத்து தெருக்களிலும் பழைய விளக்குகளை அகற்றி மின்சாரம் சேமிக்கும் வகையில் புதிதாக எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்பட்டு உள்ளன. செயலற்ற கணக்கு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பில் நூலகம் கட்டும் பணி, தூய்மை இயக்க திட்டத்தின் கீழ் ரூ. 4.53 கோடி செலவில் சமுதாய சுகாதார வளாகம் கட்டுதல், பராமரிப்பு பணிகள், நுண் உரம் தயாரிக்கும் கூடம், வளம் மீட்பு மையம் கட்டும் பணி நடந்துள்ளது. சிறப்பு நிதி சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1.87 கோடி செலவில் புதிதாக தார் ரோடு, பேவர் பிளாக் ரோடு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளது. தெருக்கள் தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கப்படுகிறது. தொற்று பரவாமல் இருக்கும் வகையில் கிருமிநாசினி, ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு, குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி