புத்தக கண்காட்சிஇலச்சினை போட்டி
தேனி: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் 5ம் ஆண்டு புத்தக திருவிழா அடுத்த மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புத்தக திருவிழாவிற்காக இலச்சினை (லோகோ) யை கருத்துருவுடன்(தீம்) வடிவமைத்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் நேரில் அல்லது gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு டிச.,3க்கள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் இலச்சினை, கருத்துருவிற்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.