உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுவன் தற்கொலை

சிறுவன் தற்கொலை

ஆண்டிபட்டி: கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவைச் சேர்ந்த லாரி டிரைவர் குமார், இவரது மனைவி மகாலட்சுமி 32, இவர்களுக்கு திலீப்குமார் 13. தியாஸ்ரீ என்ற இரு குழந்தைகள் உள்ளனர். திலீப் குமார் நாகலாபுரம் தனியார் பள்ளியில் எட்டாம் படிப்பு படித்தார். நேற்று முன் தினம் பள்ளி முடிந்த பின், டியூசன் சென்று விட்டு இரவு 7:30 மணிக்கு வந்த திலீப் குமார், தன் தாயிடம் 'பிரைட் ரைஸ்' சாப்பிட பணம் வாங்கி சென்று, கடையிலேயே சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு தாமதமாக வந்தவரை தாய் மகாலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த திலீப் குமார், தாயுடன் பேசாமல் இருந்துள்ளார். இரவு ஒரே அறையில் மகன், மகளுடன் மகாலட்சுமி தூங்கி உள்ளார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த ரீப்பர் கட்டையில் துாக்கிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை வரவழைத்து அவரை இறக்கி பார்த்தபோது அவர் இறந்து விட்டார் என்பது தெரிந்தது. மகாலட்சுமி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை