உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேட் வால்வு உடைந்து வீணாகும் குடிநீர்

கேட் வால்வு உடைந்து வீணாகும் குடிநீர்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டம் மெயின் குழாயில் கேட் வால்வு உடைந்ததால் சக்கம்பட்டி ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே கேட் வால்வு தொட்டியில் இருந்து குடிநீர் வீணாகி ரோட்டில் செல்கிறது. வைகை பிக்கப் அணை நீர் பம்ப் செய்யப்படும் நீர் குழாய் வழியாக திம்மரசநாயக்கனூர் அருகே உள்ள குடிநீர் பம்பிங் ஸ்டேஷன் செல்கிறது. இந்த மெயின் குழாயில் ஏற்பட்ட கேட்வால்வு பாதிப்பால் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வீணாகிறது. கேட்வால்வு குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை விரைவில் சரி செய்யப்படும் என்று குடிநீர் வாரிய பணியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை