மேலும் செய்திகள்
மின்கம்பம் சாய்ந்தது; பொதுமக்கள் 'ஷாக்'
02-Oct-2025
கம்பம்: கேரளாவை சேர்ந்த தொழிலாளி முகமதுராபி 38, கம்பம் லாட்ஜில் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கம்பத்தை சேர்ந்த சரவணன் தாத்தப்பன்குளம் பகுதியில் கிரில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தனது கடைக்கு கேரளாவில் வேலை செய்து கொண்டிருந்த போது பழக்கமான கேரளா, திருச்சூரை சேர்த்த தனது பழைய நண்பர் முகமது ராபி 38 , அவரது தம்பி நவ்புல் 34, ஆகிய இருவரையும் வரவழைத்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன் வந்த சகோதரர்கள் கம்பம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் உள்ள லாட்ஜில் தங்கி வெல்டிங் பணி செய்தனர். இவர்கள் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த உதயகுமார் 39, தங்கி உள்ளார். கொத்தனார் வேலை செய்யும் உதயகுமார் தனது மனைவியுடன் சண்டை போட்டு விட்டு லாட்ஜில் தங்கியுள்ளனர். பக்கத்து அறை என்பதால் முகமது ராபியும், உதயகுமாரும் நண்பர்களாகினர். இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு இருவரும் லாட்ஜில் அமர்ந்து மது குடித்த போது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. உதயகுமார் வைத்திருந்த சுத்தியலை கொண்டு முகமது ராபியின் நெஞ்சின் மீது அடித்துள்ளார். அதே இடத்தில் முகமதுராபி பலியானார். சத்தம் கேட்ட முகமது ராபியின் தம்பி நவ்புல் ஓடி வந்து பார்த்து கதறினார். பக்கத்து அறைகளில் தங்கியிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் உதயகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
02-Oct-2025