உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் நிரம்பி வழிந்த பயணிகள்

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் நிரம்பி வழிந்த பயணிகள்

தேனி: பொங்கல் விடுமுறை முடிந்து பலர் வெளியூர்களுக்கு திரும்பியதால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14 முதல் நேற்று வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூரில் பணிபுரியும் பலரும் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு வந்திருந்தனர். பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று காலை முதல் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பினர். இதனால் கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் காலை முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல், திருச்சி, கோவை, திருப்பூர் பஸ்களில் அதிக பயணிகள் பயணித்தனர். தேனியில் இருந்து கிராம பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பல டவுன் பஸ்கள் திண்டுக்கலுக்கு சிறப்பு பஸ்சாக மாற்றி இயக்கப்பட்டது. அதேபோல் மாலையில் மதுரை சென்ற பாசஞ்சர் ரயில், இரவு சென்னை சென்ற அதிவிரைவு ரயிலிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை