உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் மனு

வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் மனு

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் வணிகவியல் பள்ளிகள் சங்க மாவட்ட தலைவர் லியாகத்அலி, பொருளாளர் மோகனா, செயலாளர் மீனாகுமாரி உள்ளிட்டோர் மனு அளித்தனர். மனுவில், 'தமிழகத்தில் சுமார் 5ஆயிரம் தட்டச்சு பள்ளிகள் செயல்படுகின்றன. ஆண்டு தோறும் பல லட்சம் மாணவர்கள் தட்டச்சு பயில்கின்றனர். இந்நிலையில் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் 2026 வரை மட்டும் தட்டச்சு இயந்திரங்கள் மூலம் வணிகவியல் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தட்டச்சு பள்ளிகள் நடத்தி வரும் ஆசிரியர்கள், குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.தட்டச்சு தேர்வுகள் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி