உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆன்லைன் வர்த்தக மோசடியில் ரூ.77 லட்சத்தை இழந்த வர்த்தகர்

 ஆன்லைன் வர்த்தக மோசடியில் ரூ.77 லட்சத்தை இழந்த வர்த்தகர்

மூணாறு: மூணாறைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 'ஆன்லைன் டிரேடிங்' வாயிலாக மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் அறிமுகம் கடந்தாண்டு நவம்பரில் கிடைத்தது. அந்த நிறுவனத்தில் தங்கம் வாங்கி முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர். மும்பையில் நிறுவனம் உள்ளதாக கூறினாலும், தொடர்பு கொண்டவர்கள் தமிழில் பேசியதால் வர்த்தகருக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் நிறுவனம் வழங்கிய பல்வேறு வங்கி கணக்குகளில் கடந்த ஓராண்டில் பல தவணையாக ரூ.77 லட்சம் செலுத்தினார். அதற்கு லாப விகிதம் என்ற அடிப்படையில் ரூ.8.40 லட்சம் கொடுத்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அலைபேசி மற்றும் ஆன்லைன் ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தை தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டதால், நிறுவனம் குறித்து தீவிரமாக விசாரித்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர், இடுக்கி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ