உள்ளூர் செய்திகள்

கார் திருட்டு

தேனி:தேனி சடையால் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஹீம் 34. நேற்று முன்தினம் இவர் வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது 3 பேர் நுழைந்தனர். அவரது வீட்டில் நிறுத்தி இருந்த காரை திருடி சென்றனர். அருகில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் இக்காட்சிகள் பதிவாகி இருந்தது. ரஹீம் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர். அதே பகுதியில் உள்ள வீட்டில் சில நாட்கள் முன்பு திருட்டு நடந்தது. தேனியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. போலீசார் சுழற்சி முறையில் ரோந்து சென்றாலும் குற்றச்சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ