உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கார் டயர்கள் மாயம் டிரைவர்கள் கலக்கம்

கார் டயர்கள் மாயம் டிரைவர்கள் கலக்கம்

மூணாறு: மூணாறில் கார்களில் டயர்கள் அடிக்கடி மாயமாகி வருவதால் டிரைவர்கள் கலக்கம் அடைந்தனர். தமிழகம் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் கடந்த டிசம்பரில் மூணாறு அருகே தேவிகுளத்தில் வசிக்கும் நண்பரை காண காரில் வந்தார். கார் பழுதடைந்ததால் மூணாறில் மாட்டுபட்டி ரோட்டில் உள்ள ஒர்க் ஷாப்பில் காரை விட்டார். அங்கு நிறுத்தி இருந்த காரில் ' அலாய் வீல்' களுடன் நான்கு டயர்கள் மாயமாகின. அதேபோல் மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட்டைச் சேர்ந்த சுற்றுலா கார் டிரைவர் ராஜா, கடந்த ஏப்.3ல் இரவு வீட்டின் அருகே காரை நிறுத்தி இருந்தார். அதன் நான்கு டயர்களை கழற்ற முயன்ற மர்ம கும்பல் ஒரு டயர் மட்டும் கழற்ற முடிந்தது. அதனுடன் மாயமாகினர். இந்நிலையில் மூணாறு அருகே கிராம்ஸ்லாண்ட் எஸ்டேட்டைச் சேர்ந்த ரகு, தனது காரை வீட்டின் அருகே ரோட்டில் இரு தினங்களுக்கு முன்பு நிறுத்தி இருந்தார். அந்த காரில் இருந்து நான்கு டயர்கள் மாயமாகின. தேவிகுளம் போலீசில் ரகு புகார் அளித்தார். கார்களில் இருந்து டயர்கள் அடிக்கடி மாயமாகி வருவதால் டிரைவர்கள் கலக்கம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி