உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முத்திரைத்தாளில் முன் தேதியிட்டு நீதிமன்றத்தில் சமர்பித்து மோசடி; தேனியில் நால்வர் மீது வழக்கு

முத்திரைத்தாளில் முன் தேதியிட்டு நீதிமன்றத்தில் சமர்பித்து மோசடி; தேனியில் நால்வர் மீது வழக்கு

தேனி: தேனியில் 2011ல் வாங்கிய முத்திரைத் தாளில் 2005ல் எழுதியது போல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தனியார் பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்த நால்வர் மீது, நீதிமன்ற உத்தரவில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.பழனிசெட்டிபட்டி வாசவி காலனி சிந்துஜா 45. தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும், இவரது இறந்த கணவரின் தங்கை கலாவிற்கும் பாதை தொடர்பாக பிரச்னை இருந்தது. இது தொடர்பாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சிந்துஜா வழக்கு தொடர்ந்தார். அப்போது கலா, அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசுடன் இணைந்து பாதையை பயன்படுத்துவது தொடர்பாக பதிவு செய்யப்படாத பத்திரத்தினை அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பத்திரத்தில் 2005 மார்ச்சில் தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் வழக்கு சிந்துஜாவிற்கு எதிராக தீர்ப்பானது. இந்நிலையில் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட நீதிசாரா முத்திரைத்தாள் ஆவணம் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தேனி மாவட்ட கருவூலத்தில் சிந்துஜா மனுதாக்கல் செய்தார். கருவூலத்தின் சார்பில், 'அந்த முத்திரைத்தாள் 2011ல் விற்பனையானது.' என, அவருக்கு பதில் வந்தது. இதனால் போலியான முத்திரை தாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், அதனை விற்பனை செய்த ரவிக்குமார் என்பவரையும், ஏமாற்றிய கலா, திருநாவுக்கரசு, இதற்கு சாட்சி கையெழுத்திட்ட கலாவின் கணவர் கணேசன், உறவினர் சீனிவாசகன் உள்ளிட்ட நால்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிந்துஜா தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கலா உட்பட நால்வர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ