உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ., மகளிரணியினர் மீது வழக்கு

பா.ஜ., மகளிரணியினர் மீது வழக்கு

தேனி: தேனி நகர பா.ஜ.,மகளிர் அணி தலைவி கவிதா 45, நிர்வாகிகள் வெங்கலாநகர் சித்ரா 45, ஈஸ்வரி 46, ஓடைப்பட்டி காளீஸ்வரி 52, ஆகியோர் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக போஸ்டர் ஓட்ட முயன்றனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சங்கர ஆனந்தன் 55, புகாரில் தேனி போலீசார் நால்வர் மீதும் கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி