மேலும் செய்திகள்
ஏலச்சீட்டு நடத்தி மோசடி தாய், மகள் மீது வழக்கு
22-May-2025
தேனி: ஆண்டிபட்டி இசை கலைஞரிடம் தீபாவளி ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி ரூ.15.52 லட்சம் மோடி செய்த சுப்பாநாயுடு சந்து ஓடைத்தெருவை சேர்ந்த உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக ஊழியர் முருகன், அவரது மனைவி தீபா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.ஆண்டிபட்டி ராசு நாயக்கர் தெரு மேளம் வாசிக்கும் இசை கலைஞர் சுப்பிரமணி 59. இவரது வீட்டிற்கு 2018ல் ஆண்டிபட்டி சுப்பாநாயுடு சந்து ஓடைத் தெரு முருகன், அவரது மனைவி தீபா சென்றனர். தாங்கள் தீபாவளி சீட்டு நடத்தி வருவதாகவும், ஓராண்டுக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் சீட்டுப் பணம் செலுத்தினால், அதற்கான லாபத் தொகையாக ரூ.31 ஆயிரம் சேர்த்து ரூ.1.35 லட்சம் தருவதாக கூறினர். பணம் முதிர்வு காலம் நிறைவு பெற்றதும் அதற்கான தொகையை கொடுத்து வழங்குவதாக தெரிவித்தனர். இதனை நம்பி சுப்பிரமணி, அவரது குடும்பத்தினர் பெயர்களில் 9 சீட்டுக்களில் இணைந்து ரூ.18.52 லட்சம் செலுத்தினர். லாபத்தொகை,முதிர்வு காலம் முடிந்து பணம் கேட்டபோது வழங்காமல் காலம் கடத்தினர். இந் நிலையில் 2023 செப். 2ல் ரூ.18.52 லட்சத்திற்கான சீட்டு தொகைக்கு கடன் பத்திரம் என்ற தலைப்பில் ரூ.100 மதிப்புள்ள பத்திரத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்து முருகன்அவரது மனைவி தீபா எழுதி கையொப்பம் இட்டு சுப்பிரமணியிடம் தந்தனர். அதன்படி ரூ.3 லட்சம் மட்டுமே திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதம் உள்ள ரூ15.52 லட்சத்தை திருப்பிக் கொடுக்காமல் இருவரும் கூட்டுச்சதி செய்து ஏமாற்றினர். பாதிக்கப்பட்ட சுப்பிரமணி தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன், முருகன் - தீபா தம்பதி மீது மோசடி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
22-May-2025