உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேலை  வாங்கித்தருவதாக ரூ.37 லட்சம் மோசடி கமுதியை சேர்ந்தவர் மீது வழக்கு

வேலை  வாங்கித்தருவதாக ரூ.37 லட்சம் மோசடி கமுதியை சேர்ந்தவர் மீது வழக்கு

தேனி:திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி கோயிலில் வேலை வாங்கித்தருவதாக 9 பேரிடம் ரூ.37 லட்சம் பெற்று ஏமாற்றிய ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா கருங்குளம் பாக்குவெட்டியை சேர்ந்த நடராஜன் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.தேனி க.விலக்கு திருமலாபுரம் பிஸ்மி நகரை சேர்ந்தவர் காமேஸ்வரன் 65. இவரது நண்பர் மணிபாலன். இவர் மூலம், காமேஸ்வரனுக்கு கமுதி தாலுகா கருங்குளம் பாக்குவெட்டியை சேர்ந்த நடராஜன் பழக்கம் ஏற்பட்டது. நடராஜன், பழநி தண்டாயுதபாணி கோயில் அலுவலகத்தில் உங்கள் உறவினர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன்' என்றார். இதனை நம்பிய காமேஸ்வரன், தமது 9 உறவினர்களுக்கு அரசு பணி வாங்கித்தரக் கோரி நடராஜனின் வங்கிக்கணக்கில் ரூ.39.29 லட்சம் செலுத்தினார். பின் ரொக்கமாக ரூ.5.71 லட்சம் வழங்கினார்.பணத்தை பெற்ற நடராஜன் 9 பேருக்கும் பணி ஆணைகளை வழங்கினார். வேலையில் சேர சென்றபோது ஆணைகள் போலி என தெரிந்தது. பணத்தை திருப்பித்தருமாறு காமேஸ்வரன் கோரியதால் ரூ.8 லட்சம் மட்டும் நடராஜன் திருப்பி வழங்கினார். ரூ.37 லட்சம் பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்தார். தேனி எஸ்.பி.,சிவபிரசாத்திடம் காமேஸ்வரன் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடராஜன் மீது மோசடி வழக்குப் பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை