உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொலை மிரட்டல் ஒருவர் மீது வழக்கு

கொலை மிரட்டல் ஒருவர் மீது வழக்கு

போடி : தேவாரம் ஐயப்பன் கோயில் தெரு வைரமுத்து பாரதி 36. செங்கல் காளவாசல் வைத்துள்ளார். இவர் நீர்வளத் துறையில் அனுமதி பெற்று எரணம்பட்டி தம்புராயன் குளத்தில் டிராக்டரில் மண் அள்ளி உள்ளார். அப்போது போடி அருகே கெஞ்சம்பட்டியை சேர்ந்த ராஜா 34, 'குளத்தில் எப்படி மண் அள்ளிச் செல்லலாம்' என கூறி, வைரமுத்து பாரதியிடம் தகராறு செய்து, தகாத வார்த்தையால் திட்டி, கம்பால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். வைரமுத்து பாரதி புகாரில் போடி தாலுகா போலீசார் ராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி