வெடி வைத்து பாறை உடைத்தவர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன். குள்ளப்புரம் அருகே இவரது நிலத்தில், பாறைகளை துளையிடும் வாகனம் மூலம் வேலை செய்வதாக வந்த தகவலின் பேரில் குள்ளப்புரம் வி.ஏ.ஓ., முருகன் சோதனையிட சென்றார். இதில் பாறையின் வடக்கு பக்கம் பாறை வெடிவைத்து உடைக்கப்பட்டதை கண்டறிந்தார். அரசு அனுமதியின்றி பாறைகளை வெடிக்கச் செய்தும், அருகேயுள்ள மண்ணை, மண் அள்ளும் வாகனத்தில் பள்ளம் தோண்டியதை கண்டறிந்தார். வி.ஏ.ஓ., புகாரில், ஜெயமங்கலம் போலீசார் நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்தும், மேலும் துளையிட உதவியவர்கள் யார் என விசாரணை செய்து வருகின்றனர்-