மேலும் செய்திகள்
கோயில் அருகே பெண் இறப்பு
18-Jun-2025
தேவதானப்பட்டி: சென்னை கூடுவாஞ்சேரி நந்திவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் 45. இவரது மகள் வர்ஷிதா 13. குமாரின் தாயார், தனது பேத்தி வர்ஷிதா பெயருக்கு தான செட்டில்மென்டாக தேவதானப்பட்டி அருகே தோட்டம் உள்ளிட்ட சொத்துக்களை பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த சொத்துகளுக்கு குமார் பாதுகாவலராக உள்ளார்.தேவதானப்பட்டி அருகே கோட்டார்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன், இவரது நண்பர்கள் அன்பழகன், மரகதம் மற்றும் ஆனந்தன் உறவினர்கள் சிலர், சில தினங்களுக்கு முன் வர்ஷிதா தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து தேக்கு மரங்களை வெட்டி திருடியுள்ளனர்.குமார் புகாரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
18-Jun-2025