சட்டசபை தேர்தலுக்கு பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு
தேனி: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் 2011 ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் இந்தாண்டு கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பின் கணக்கெடுப்பு பணி துவங்குகிறது. இதற்காக முதற்கட்ட பணிகளை அதிகாரிகள் துவங்கி உள்ளனர். இப்பணியில் ஈடுபட ஏற்கனவே பணியில் உள்ள அரசு அலுவலர்களுடன், சில ஒப்பந்த பணியாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வாகும் அலுவலர்களுக்கு தேர்தல் பணியின் போதே கணக்கெடுப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தவிர கணக்கெடுப்பின் போது பொதுமக்களிடம் 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளது. கணக்கெடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணி முழுதும் டிஜிட்டல் முறையில் நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.