ஆக.ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி
தேனி: மாவட்டத்தில் ஆகஸ்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஆக.,ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள், அலுவலர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதற்கட்ட பயிற்சி வகுப்பு மே 25,26,27 ல் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த பயிற்சி வகுப்பில் தாசில்தார்கள், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பி.டி.ஓ.,க்கள், கணக்கெடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் செயலியில் தகவல்களை பதிவேற்றம் செய்வது உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட உள்ளனர் என்றனர்.