உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மக்காச் சோளத்திற்கான செஸ்வரியை நீக்க வேண்டும்

மக்காச் சோளத்திற்கான செஸ்வரியை நீக்க வேண்டும்

தேனி: மக்காச்சோளத்திற்கு அரசு மார்க்கெட் கமிட்டி விதித்துள்ள ஒரு சதவீத 'செஸ்' வரியை திரும்ப பெறவேண்டும் என தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்ட வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நடேசன் தலைமை வகித்தார். செயலாளர் ரெங்கராஜ், துணைச்செயலாளர் விஜயன், பொருளாளர் செண்பகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடேசன் கூறுகையில், மக்காச்சோளம் உணவுப்பொருளாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மக்காச் சோளத்திற்கு அரசு மார்க்கெட் கமிட்டி சார்பில் ஒரு சதவீத ' செஸ்' வரி விதிக்கப்படுகிறது. விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. மார்க்கெட் கமிட்டி விதித்த செஸ் வரியை நீக்க வேண்டும். என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ