முதல்வர் கோப்பை போட்டி நிறைவு
தேனி: மாவட்டத்தில் கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் துவங்கின. பள்ளி, கல்லுாரி, பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் என போட்டிகள் நடந்தது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் நேற்றுடன் முடியும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. கல்லுாரி பிரிவில் அனைத்து வகையான போட்டிகளும் நேற்று முடிந்தன. பள்ளி பிரிவில் மாணவர்களுக்கு கால்பந்து, மாணவிகளுக்கு கூடைப்பந்து போட்டி தவிர மற்ற அனைத்து போட்டிகளும் முடிந்தன. சுமார் 10ஆயிரம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் முதல்வர் கோப்பை போட்டிகளில் இதுவரை பங்கேற்றனர். செப்.,10க்குள் அனைத்து பிரிவு போட்டிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.