முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நாளை துவக்கம் மாவட்டத்தில் 37 ஆயிரம் பேர் பதிவு
தேனி : தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நாளை(ஆக.,26) துவங்கி செப்.,10 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 37 ஆயிரம் பேர் பதிவுசெய்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு நாளை தடகளம், கிரிக்கெட், கபடி, சிலம்பம், நீச்சல், செஸ், கேரம் போட்டிகள், செப்.,1ல் கூடைப்பந்து, ஹாக்கி, வாலிபால், செப்.,4ல் கால்பந்து நடக்கிறது. மாணவிகளுக்கு செப்.,1ல் தடகளம், நீச்சல், சிலம்பம், கைப்பந்து, கேரம், செஸ், கால்பந்து, செப்.,4ல் கபடி, கிரிக்கெட், ஹாக்கி, கோ கோ, செப்.,6ல் வாலிபால், கூடைப்பந்து போட்டிகள் நடக்கிறது. இருபாலர் பிரிவில் இறகுப்பந்து செப்.,4, டேபிள்டென்னிஸ் செப். 6ல் நடக்கிறது. கல்லுாரி பிரிவில் மாணவர்களுக்கு நாளை கூடைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், வாலிபால், ஆக.,28ல் கிரிக்கெட், தடகளம், கபடி, கிரிக்கெட், சிலம்பம், நீச்சல், செப்.,2ல் கால்பந்து, கேரம், செஸ் போட்டிகள் நடக்கிறது. மாணவிகள் பிரிவில் ஆக.,28 ல் ஹாக்கி, பூப்பந்து, நீச்சல், ஆக.,29ல் கூடைப்பந்து, வாலிபால், சிலம்பம், தடகளம், ஆக.,30ல் கபடி ,கிரிக்கெட், கால்பந்து, செப்.,3ல் செஸ், கேரம் போட்டிகள் நடக்கிறது. இருபாலர் பிரிவில் செப்.,1ல் டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து செப்.,6ல் நடக்கிறது. மாற்றத்திறனாளிகளுக்கான போட்டிகள் செப்.,10ல் நடக்கிறது.பொதுப்பிரிவில் ஆண்களுக்கு செப்.,2 முதல் செப்., 10 வரையிலும், பெண்களுக்கு செப்., 3 முதல் செப்., 10 வரை போட்டிகள் நடக்கிறது. அரசு ஊழியர்களுக்கு செப்.,9ல் போட்டிகள் நடக்கிறது. பங்கேற்போர் உரிய அடையாள அட்டை, ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல், தேவையான உபகரணங்களுடன் வர வேண்டும். கிரிக்கெட், கூடைப்பந்து போட்டிகள் ஆயுதப்படை மைதானத்திலும் மற்றவை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தை நேரில் அல்லது 74017 03505 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.