உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுவன் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள்

சிறுவன் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள்

தேனி: கம்பத்தில் 12 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி செல்வேந்திரனுக்கு 42, ஆயுள் தண்டனை, ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கம்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் 8ம் வகுப்பு படித்து வந்தார். 2021 நவ. 28ல் தெருவில் விளையாடிய சிறுவனை, அப்பகுதிக்கு வந்த செல்வேந்திரன்,வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்தார்.சிறுவன் புகாரில் 2022 ஜூலை 24ல் கம்பம் வடக்கு போலீசார், செல்வேந்திரன் மீது போக்சோ வழக்குப் பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று விசாரணை முடிந்து குற்றவாளி கூலித்தொழிலாளி செல்வேந்திரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.60 அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சத்தில், அபராதத் தொகை ரூ.60 ஆயிரம் நீங்கலாக ரூ.4.40 லட்சம் அரசு வழங்க வேண்டும். அதில் ரூ.1 லட்சம் சிறுவனின் கல்வி, மருத்துவம், பராமரிப்பு செலவினங்களுக்காக தாயாரிடமும், மீதியுள்ள ரூ 4லட்சத்தை சிறுவனின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செலுத்த தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !