சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்
தேனி: பழனிசெட்டிபட்டி அரசு பஸ் டிப்போ முன்பு பஸ்களுக்கு டயர் உள்ளிட்ட தரமான உதிரி பாகங்கள் வழங்க கோரியும், திண்டுக்கல் மண்ட நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும், போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், புகார்கள் மீதுவிசாரிக்காமல் நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும் போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ., அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி கிளை செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மத்திய சங்க செயலாளர் பாக்கிய செல்வன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் வெள்ளை தண்டி, மணிகண்டன், சந்திரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.