உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேர் வாடல் நோய் பாதிப்பு: தென்னை வாரிய குழுவினர் ஆய்வு

வேர் வாடல் நோய் பாதிப்பு: தென்னை வாரிய குழுவினர் ஆய்வு

தேனி: மாவட்டத்தில் தென்னையில் கேரள வேர்வாடல் நோய் பாதிப்பு பற்றி தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள், தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் சுமார் 26, 400 எக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையை கேரள வேர்வாடல் நோய், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்கள் அதிகரித்து மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மத்திய வேளாண் அமைச்சக உத்தரவில் தென்னை வளர்ச்சி அலுவலர் ஹனுமந்தகவுடா, மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஜோசப்ராஜ்குமார், தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் சாந்தாசெலின், துணை இயக்குநர் நிர்மலா ஆகியோர் கொண்ட குழுவினர் கம்பம் பகுதியில் தென்னந்தோப்புகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர். விவசாயிகளிடம் வேர்வாடல் நோய் தாக்குதல் பற்றி கேட்டறிந்தனர். ஆய்வு தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி