போலீஸ் ஸ்டேஷனில் கலெக்டர் ஆய்வு
போடி : போடி ஒன்றியம்குரங்கணி போலீஸ் ஸ்டேஷனில்கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், சத்துணவு, காலை உணவு திட்டம் குறித்துகலெக்டர்ஆய்வு நடத்தினார்.இதில்மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். அதன் பின் குரங்கணி போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சி.சி.டி.வி., கேமரா, போலீசார் விபரம், கணினி நிலவரம், கொட்டக்குடி துணை சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து, மாத்திரைகளின் இருப்பு விவரம்,அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்கள், பதிவேடுகள், தொல்குடி திட்டத்தின் கீழ் பழங்குடியினர் வசிக்கும் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.