உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தடை செய்த மெத்தபெட்டமைன் பதுக்கிய கல்லுாரி மாணவர் கைது

தடை செய்த மெத்தபெட்டமைன் பதுக்கிய கல்லுாரி மாணவர் கைது

கம்பம், : கம்பம் பைபாஸ் ரோட்டில் அரசால் தடை செய்த 2 கிராம் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் வைத்திருந்த கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார். கம்பம் பைபாஸ் ரோட்டில் தெற்கு எஸ்.ஐ., தேவராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தனர். அவரது சட்டைப் பையில் அரசால் தடை செய்த 2 கிராம் 10 மில்லி அளவுள்ள மெத்தபெட்டமைன் என்னும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கம்பம் காமாட்சியம்மன் கோயில் தெருஆனந்தன் மகன் சாருகேஷ் 19, என தெரிந்தது. இவர் தனியார் கல்லுாரி ஒன்றில் பட்டப்படிப்பு 3ம் ஆண்டு படித்து வருகிறார். போதைப் பொருளை பெங்களூருவில் இருந்து வாங்கியதாக கூறியுள்ளார். கைப்பற்றிய போதைப் பொருள் மதிப்பு ரூ.10 ஆயிரமாகும். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ