உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிக்கப் அணை நீரில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

பிக்கப் அணை நீரில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

ஆண்டிபட்டி ஆசாரிபட்டி வெற்றிவேந்தன் மகன் சிவகுமார் 19. கோட்டூரில் உள்ள அரசு கலை கல்லுாரி மாணவர். உடன் பிறந்த அக்கா பவதாரணியின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நேற்று மாலை நடக்க இருந்தது. நேற்று மதியம் வைகை அணை பிக்கப் அணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி விட்டார். உடன் சென்ற நண்பர்கள் அளித்த தகவலில் ஆண்டிபட்டி தீயணைப்பு துறையினர் பிக்கப் அணையில் மாணவனின் உடலை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி