மேலும் செய்திகள்
சிறுவன் மாயம்
15-Dec-2024
ஆண்டிபட்டி, : கண்டமனூர் அருகே பந்துவார்பட்டியைச் சேர்ந்தவர் வீரசங்கிலி, தனது மனைவியுடன் கேரளாவில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஆனந்தி 18, தேனி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.10 நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுமுறை என்பதால் பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. கல்லூரியில் விசாரித்த போது அங்கும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். பலஇடங்ளில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் வீரசங்கிலி க.விலக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
15-Dec-2024