உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா

 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா

ஆண்டிபட்டி: தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பாலிடெக்னிக்கில் நடந்தது. கல்லூரி நிர்வாக குழு தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பிரசன்னவெங்கடேசன், சுதா, ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட திட்ட மேலாளர் சுந்தரேஸ்வரர் மாணவர்களை ஊக்குவித்து பல்வேறு தனியார் நிறுவனங்களின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பொறியியல் கல்லூரி முதல்வர் அருள்குமார், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் காசுமாயன் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்வி குழும மேலாளர் நாகேந்திர குமார், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர்கள் பாலா, கருப்புசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை