உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணினி ஆய்வகம் திறப்பு விழா

கணினி ஆய்வகம் திறப்பு விழா

போடி,: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு விழா பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன் தலைமையில் நடந்தது. செயலாளர் இனாயத் உசேன் கான் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணி வரவேற்றார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது சொந்த நிதி ரூ.14 லட்சம் மதிப்பில் 14 கணினிகள் பள்ளிக்கு வழங்கி அதற்கான ஆய்வகத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.விழாவில் பள்ளி ஆட்சி குழு உறுப்பினர்கள் சேதுராம், காளிமுத்து, மாரிமுத்து, முருகன், மணிகண்டன், சண்முக வரதராஜ், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நகர செயலாளர் பழனிராஜ், நகர அவைத் தலைவர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் அரண்மனை சுப்பு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி