காங்., ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல், முன்னாள் காங்., தலைவர் சோனியா ஆகியோர் மீது வழக்குப்பதிய அமலாக்கத்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசை கண்டித்து மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சன்னாசி, மாவட்டச் செயலாளர் சர்புதீன், நகரத் தலைவர் கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் மெழுது வர்த்தி ஏந்தி, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.