உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜூலை 12ல் நுகர்வோர் குறைதீர் முகாம்

ஜூலை 12ல் நுகர்வோர் குறைதீர் முகாம்

தேனி: பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சீனி, பாமாயில் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பொருட்கள் வினியோகத்தில் உள்ள குறைகள், புதிய ரேஷன் கார்டு பெறுதல், திருத்தம் உள்ளிட்டவை மேற்கொள்ள மாதந்தோறும் நுகர்வோர் குறைதீர் முகாம்கள் தாலுகா வாரியாக சப் கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் நடத்தப்படுகிறது.ஜூலை 12ல் ஆண்டிபட்டி கோரையூத்து சமுதாயகூடம், பெரியகுளம் சருத்துப்பட்டி, தேனி காட்டுநாயக்கன்பட்டி, போடி பெருமாள் கவுண்டன்பட்டி, உத்தமபாளையம் டி.பொம்மிநாயக்கன்பட்டி ரேஷன் கடைகளில் முகாம் நடக்கிறது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி