உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொரோனா தொற்று: கிராமங்களில் அலர்ட்

கொரோனா தொற்று: கிராமங்களில் அலர்ட்

கம்பம் : கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கிராமங்களில் சுகாதார மேற்பார்வையாளர்கள் அலர்ட்டாக இருக்க கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.தற்போது கேரளாவில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று பரவலாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை சுகாதாரத்துறையினர் மறுக்கின்றனர். காரணம் எங்கும் இறப்பு பதிவாகவில்லை.ஆனால் கிராமங்களில் சுகாதார - மேற்பார்வையாளர்களும் , நர்சுகளும் முழு அளவில் கண்காணிப்பில் இருக்க கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறுகையில், கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாறும். இப்போது வீரியம் குறைந்த வைரஸ் பரவுவதால் பாதிப்பு இல்லை. சாதாரண காய்ச்சல் வரும். உரிய ஆன்டிபயாடிக் மற்றும் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் உட்கொண்டால் சரியாகும். எனவே தான் கொரோனா பரிசோதனைகள் எதுவும் செய்யவில்லை. இருந்த போதும் மஸ்தூர்கள் மூலம் வீடு - தோறும் கண்காணிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முடிந்தவரை அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்வதும், கூட்டங்களை தவிர்ப்பதும், சாப்பிடும் முன்பும், கழிப்பறை சென்று வந்த பின்பும் நன்றாக - சோப்பு போட்டு கைகளை சுத்தப்படுத்துவது நல்லது, என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை