உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் ரூ.200 கள்ளநோட்டு புழக்கம்

பெரியகுளத்தில் ரூ.200 கள்ளநோட்டு புழக்கம்

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் ரூ.200 கள்ளநோட்டு புழக்கத்தால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.பெரியகுளம் தென்கரை மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் 65 வயது மூதியவர் காய்கறி வியாபாரம் செய்தார். அவரிடம் ஒருவர் ரூ.40க்கு காய்கறி வாங்கி விட்டு ரூ.200 கொடுத்தார். முதியவர் பாக்கி ரூ.160 கொடுத்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு ரூ.500 கொடுத்து காய்கறிகள் வாங்கிய நபருக்கு கடைக்கார முதியவர் முன்பு வாங்கிய ரூ.200,ரூ.100 நோட்டுக்களை பாக்கியாக கொடுத்துள்ளார். அதனை பெற்ற நபர் ரூ.200யை நகல் எடுத்த கள்ளநோட்டு என திரும்பக் கொடுத்துள்ளார். அப்போது தான் முதியவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதே போல் சில தினங்களுக்கு முன்பு வடகரை பகுதியில் டீக்கடையில் ரூ.200 கள்ளநோட்டு நகல் எடுத்து கொடுத்துள்ளனர். பெரியகுளம் பகுதியில் பரவலாக ரூ.200 கள்ளநோட்டு புலங்குகிறது. போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை