கிரிக்கெட் வீரர்கள் தேர்வுநவ.29ல் நடக்கிறது
தேனி: தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான ஆடவர் அணி தேர்வு நாளை (நவ.,29) காலை 10:00 மணிக்கு தேனி கே.ஆர்.ஆர்., நகர் எம்.எம்.சி.எப்., நெட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. தேர்வில் 1996 செப்., 1 முதல் 2012 ஆக.,31க்குள் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்கும் வீரர்கள் வெள்ளை நிற கிரிக்கெட் சீருடை, வயது சான்றிதழ் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 97106 76005 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.